×

போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் தேனி-குச்சனூர் சாலை நெடுஞ்சாலைத்துறை கவனிக்குமா?


தேனி, டிச.6: தேனியில் இருந்து உப்புக்கோட்டை வழியாக குச்சனூர் செல்லும் சாலை சேதமடைந்திருப்பதால் நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. குச்சனூருக்கு தேனியில் இருந்து சின்னமனூர் வழியாகவும், தேனியில் இருந்து உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர் வழியாகவும் செல்ல நெடுஞ்சாலைகள் உள்ளது. இதில் தேனியில் இருந்து  உப்புக்கோட்டை வழியாக செல்லும் சாலையில் உப்புக்கோட்டை, போடேந்திரபும், பாலார்பட்டி பகுதிகளில் பல இடங்களில் நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து சாலையின் நடுவே பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன.

இரவு நேரங்களில் இச்சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் பள்ளங்களில் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. பள்ளம் இருப்பதை அறியாமல் பலர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவதும் நடந்து வருகிறது. எனவே, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள இந்த சாலையை மாநில நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Theni-Kuchanur ,
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...