×

பைக்கில் கடத்தி வரப்பட்ட மது பறிமுதல்

முத்துப்பேட்டை, டிச.6: முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு செக் போஸ்ட்டில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே வழியாக வந்த ஒரு பைக்கை நிறுத்தி சோதனையிட்டதில் பைக்கில் 150 பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் கடத்திவரப்பட்டது தெரிந்தது.இந்நிலையில் பைக்கில் வந்தவர் போலீசை கண்டதும் பைக்கை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி விட்டார்.  இதையடுத்து பைக் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்