×

கோட்டூர் ஒன்றியத்தில் கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் தீவிரம் சேத விபரங்கள் கணினியில் பதிவு

மன்னார்குடி, டிச. 6: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் கஜா புயல் மிக பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. 49 ஊராட்சிகள் உள்ளடக்கிய இந்த ஒன்றியத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களே அதிக அளவில் உள்ளனர். புயலின் கோரப்பிடியில் சிக்கி பல்லாயிரக் கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வேதனையில் உள்ளனர். சேதமடைந்த தென்னை மரங்களுக்கு அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் கோட்டூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தின் சார்பில் ஒன்றியம் முழுவதும் தமிழக வேளாண்மை உதவி இயக்குனர் பால சவுந்தரி தலைமையில் சென்னையில் இருந்து வந்த   சிறப்பு குழு ஒன்று புயலால் சேதமடைந்த தென்னை மரங்கள் உள்ள பகுதிகளுக்கு சென்று தனது ஆய்வு பணிகளில் ஈடுபட்டது.

அதனை தொடர்ந்து, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சந்துரு, துணை இயக்குனர் சிவக்குமார் ஆகியோரது அறிவுறுத்தலின் பேரில் கோட்டூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முரளி  தலைமையில் குழுவினர் கோட்டூர் ஒன்றி யத்தில் உள்ள 56 வருவாய் கிராமங்களில் புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை தீவிரமாக  கணக்கெடுத்து வருகிறது.இந்நிலையில் புயலால் சேதமடைந்த தென்னை மரங்கள் குறித்து  கணக் கெடுக்கப்பட்ட விபரங்கள் அனைத்தும் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரியில் வைத்து சேத விபரங்கள் முழுவதும் கணினியில் பதி வேற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : Ghazi ,storm ,Kattur Union ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...