×

பாபர் மசூதி இடிப்பு தினம் சிதம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

சிதம்பரம், டிச. 6: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி ரயில்வே எஸ்பி சரோஜ்குமார் தாகூர் உத்தரவின்பேரில் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். நேற்று சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தலைமை காவலர் சாந்தி, தனிப்பிரிவு தலைமை காவலர் பாஸ்கரன் மற்றும் போலீசார் பயணிகளின் உடைகளை சோதனை செய்தனர். பின்னர் சிதம்பத்திற்கு திருச்சியில் இருந்து வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி பயணிகளின் உடைகளை சோதனையிட்டனர். சிதம்பரம் நகரில் பேருந்து நிலையம், நடராஜர் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Babri Masjid ,railway station ,Chidambaram ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!