×

திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி, டிச.5: திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் கேட்டு 2 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புயல் தாக்கியதில் மின் கம்பங்கள் சேதமடைந்து சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நகர பகுதியில் பெரும்பாலான பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் புயல் தாக்கி 18 நாட்களுக்கு மேலாகியும் மின்சாரம் இல்லாததால் உடனே மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் அண்ணா நகர் மெயின் ரோட்டில் திடீர் சாலைலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மின் வாரிய உதவி செயற்பொறியாளர் குமார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின்சாரம் வழங்குவதாக தெரிவித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல திருத்துறைப்பூண்டி அடுத்த பாமணி அத்திமடை பகுதியிலும் மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருத்துறைப்பூண்டி- நாகப்பட்டினம் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,places ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி