×

தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரத்தில் ஏரியை ஆக்கிரமித்து 30 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் அதிரடி அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

தண்டராம்பட்டு, டிச.5: தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரத்தில் ஏரியை ஆக்கிரமித்து 30 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர்களை அரசு அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.
தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் ஊராட்சிக்கு சொந்தமானது மாலா நகர் பெரிய ஏரி. இந்த ஏரி 130 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்நிலையில் ஏரியில் சுமார் 30 ஏக்கருக்கு மேல் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து கரும்பு, நெல் பயிரிட்டு இருந்தனர்.

எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று பிடிஓக்கள் மகாதேவன், பரிமேலழகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மிருணாளினி, சிவகுமார், வருவாய் ஆய்வாளர் விஜயகுமார், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம், ஊராட்சி செயலாளர் ஏழுமலை ஆகியோர் ஜேசிபி மூலம் ஏரியில் பயிரிட்டிருந்த நெற்பயிர்களை அதிரடியாக அகற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : paddy farmers ,lake ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...