×

அரியலூர் மாவட்டத்தில் நபார்டு வங்கி திட்ட மதிப்பீடு ரூ.2641 கோடி கடன் வாய்ப்பு

அரியலூர்,நவ,29: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வங்கிகளுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர்  விஜயலட்சுமி தலைமையில்   நடைபெற்றது. இக்கூட்டத்தில், நபார்டின் செறிவு சார் கடன் திட்ட அறிக்கையினை   மாவட்ட கலெக்டர் வெளியிட்டு, பேசுகையில், அரியலூர் மாவட்டத்திற்கு 2019-20ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் நபார்டு வங்கி திட்ட மதிப்பீடு ரூ.2641 கோடி முன்னுரிமை வங்கிக் கடன்களாக வழங்க வாய்ப்புகள் உள்ளது.  மாவட்டத்தில் தற்போது உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள் விரிவாக்க சேவை மையங்களின் செயல்பாடு, பெருகிவரும் தொழில்நுட்ப பரிமாற்றம், வங்கிகளின் நிதி ஆதாரம் ஆகியவற்றை ஆதாரமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நபார்டு செறிவு சார் கடன் திட்ட அறிக்கையை ஒரு புத்தகமாக வெளியிடுகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு வேளாண் துறைக்கு ரூ.2344 கோடி, சிறு,குறு தொழில்களுக்கு   ரூ.58 கோடி, இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.239 கோடி என வாய்ப்புகள் உள்ளது.

இந்த திட்ட அறிக்கை மாவட்டத்தின் வளமையை மட்டுமே முன் நிறுத்தி தயாராக்கப்படுகிறது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இந்த திட்ட அறிக்கையை பின் புலமாக கொண்டு அடுத்த ஆண்டுக்கான அவர்களது கடன் திட்டங்களை தயாரிக்கும் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான பாரத ஸ்டேட் பாங்கு அந்த திட்டங்களை ஒழுங்கு முறைபடுத்தி மாவட்ட கடன் திட்டமாக   தயாரித்து பின்னர் வெளியிடப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் செறிவு சார் கடன் திட்ட அறிக்கைகளை தயாரித்து அவைகளை ஒன்றிணைந்து மாநில திட்டமாக்கி, மாநில அரசு மற்றும் மாநில அளவில் உயர்வங்கி அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டம் நபார்டு சார்பில் நடத்துவதால், வங்கி கடன்கள் அதிகரிப்புக்கு தடையாக இருக்கும் இடர்பாடுகள் விரிவாக விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஏதுவாக இருக்கின்றது. மேலும், சொட்டு நீர் பாசனம், தரிசு நில மேம்பாடு, பழப்பயிர் பண்ணைகள், மீன் வளர்ப்பு, ஊரக கிடங்குகள், கூட்டு பொறுப்புகள், குழுக்கள் அமைத்தல் போன்ற கடன் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : NABARD ,Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...