×

அரியலூர் கொலையனூரில் அரசு பள்ளி அருகே கள்ளச்சாராயம் விற்பனை

அரியலூர்,நவ,29: அரியலூர் மாவட்டம், கொலையனூர் கிராமத்தில் அரசுப்பள்ளியின் அருகே உள்ள கடையில் சமூக விரோதிகள் சிலர் கள்ளத்தனமாக மதுபானம் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து  மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில் அரசு பள்ளிக்கு அருகாமையிலேயே அனுமதியின்றி கள்ளதனமாக மதுபானம் விற்க்கப்படுவதால் தினந்தோறும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை மது அருந்திவிட்டு தகராறு செய்வது குடித்து விட்டு பள்ளி அருகிலேயே படுத்து உருளுவது என  இப்பகுதியில்  வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.  இது குறித்து அவ்வழியே  செல்லும் போலீசார் கண்டும் காணாமல் செல்வதால்  பொதுமக்கள் யாரிடம் புகார் தெரிவிப்பது என சந்தேகமடைந்துள்ளனர். மேலும் காவல் துறையினர் கண்டும் காணாமல் செல்வதால் கொலையனூர் கிராமத்தில் பல இடங்களில் கள்ளதனமாக மது விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் இது போன்று மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு அருகில் மதுபாணம் விற்பதை தடைசெய்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்து சிறை தண்டனை அளிக்க வேண்டும் என கொலையனூர் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கண்டுகொள்ளாத போலீஸ்

Tags : Ariyalur ,government school ,Kallacharai ,Kolonnur ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...