×

வைகுண்ட ஏகாதசி திருவிழா ரங்கத்தில் டிச.7ல் துவக்கம்

திருச்சி, நவ.28: பூலோக  வைகுண்டம் எனப்படும் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் மார்கழி மாதத்தில் 21  நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் முக்கியத்துவம்  வாய்ந்தது. பகல்பத்து, ராப்பத்து என 21 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படும். இந்தாண்டு  வைகுண்ட ஏகாதசி விழா வரும் டிசம்பர் 7ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன்  துவங்குகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர்  18ம் தேதி நடைபெற உள்ளது. பகல் பத்து டிசம்பர் 8ம் தேதி துவங்கி 17ம் தேதி  வரை நடைபெறும். விழா நாட்களில் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன  மண்டபத்தில் எழுந்தருள்வார். பகல்பத்தின் கடைசி நாளான 17ம் தேதி  நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில்  காட்சியளிப்பார். தொடர்ந்து ராப்பத்து முதல் நாளான 18ம் தேதி விழாவின்  முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது. வைகுண்ட  ஏகாதசி விழா நாட்களில் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்  அலைமோதும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து  கொள்வார்கள். ராப்பாத்து நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வான 24ம் தேதி திருக்கைத்தல சேவையும், 25ம் தேதி திருமங்கை மன்னனின் வேடுபறி  நிகழ்ச்சியும், 27ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 28ம் தேதி  நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமுறையும் நடைபெற உள்ளது.

லட்சக்கணக்கான  பக்தர்கள் கோயிலில் அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்துவிட்டு  செல்வதற்காக கோயில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு  வருகிறது. நம்பெருமாள் எழுந்தருளும் ஆயிரங்கால் மண்டபம் அலங்காரம்  செய்யப்பட்டு உள்ளது. பரமபதவாசலின் கதவுகளில் புதிய வர்ணம் தீட்டப்பட்டு  உள்ளது. மேலும் ஆயிரங்கால் மண்டபத்தில் எதிரில் உள்ள மணல் வெளியில்  பக்தர்கள் வசதிக்காக பந்தல் போடப்பட்டுள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில்  நிற்கும்போது பனி மற்றும் வெயில் தாக்கத்தில் சிக்கி கொள்ளாமல்  இருப்பதற்காக மேற்கூரை மற்றும் தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன.  கோயிலின் அனைத்து கோபுரங்கள் மற்றும் மதில் சுவர்களில் மின் அலங்காரம்  செய்யப்பட்டு வருகிறது.. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர். ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி மேற்கொண்டு வருகின்றார். கொப்பரை தேங்காய் விலை ரூ.4 உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

Tags : Vaikunta Ekadasi ,festival ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...