×

கஜா புயலால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்

தஞ்சை, நவ. 28: தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த வேளாண் பயிர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்று வேளாண் இணை இயக்குனர் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை கணக்கெடுப்பு செய்ய உதவி வேளாண் அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண் அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 126 அலுவலர்கள் மற்றும் விழுப்புரம், வேலூர், கரூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 193 அலுவலர்கள் என மொத்தம் 319 அலுவலர்கள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இக்கணக்கெடுப்பு பணியை மேற்பார்வை செய்ய வேளாண் உதவி இயக்குனர்கள், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் வேளாண்மை துணை இயக்குனர்கள் ஆகியோர் மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் இப்பணியை கூர்ந்தாய்வு செய்ய சென்னை வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வேளாண்மை இணை இயக்குனர் தலைமையின்கீழ் வேளாண்மை துணை இயக்குனர், வேளாண் உதவி இயக்குனர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உள்ளிட்ட 13 அலுவலர்கள் 3 நாட்கள் தங்கியிருந்து இப்பணியை மேற்கொள்ள உள்ளனர். வேளாண் அதிகாரி தகவல்

Tags : storm ,Ghazi ,
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...