×

செந்துறை அருகே பெண் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கைது

செந்துறை,நவ.28: செந்துறை அருகே பெண் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்து, இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்த இளம் பெண் சிதம்பரம் பல்கலைக் கழக வேளாண் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். இவரை, செந்துறை பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருடைய மகனும், அரவிந்தன்  கடந்த 25ம் தேதி இரவில் பெண் கேட்டு வந்துள்ளார். அதற்கு சிவப்பிரியா தந்தை சிவகுமார் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அரவிந்தன், சிவகுமாரின் இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து புகாரின் பேரில் இரும்புலிகுறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து அரவிந்தனை நேற்று கைது செய்தனர். லாரியிலிருந்து தவறி விழுந்த கொத்தனார் பலி: தேனி மாவட்டம், கம்பம் பாளையம்மாள்புரத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன்(52). சென்னையில் கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று சென்னையிலிருந்து திருச்சி வழியாக தேனி மாவட்டத்திற்கு செல்ல அடையாளம் தெரியாத லாரியில் வந்துள்ளதாக தெரிகிறது. பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஓடும் லாரியிலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்ததால், ஆபத்தான நிலையில் முனீஸ்வரன் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நிலை தடுமாறி கீழே விழுந்த கிராம உதவியாளர் சாவு: அரியலூர் அருகே மணகெதி கிராமத்தை சேர்ந்த பாலுசாமி (50) கிராம உதவியாளராக இருந்து வந்தார். இவருக்கு கடந்த 4 வருடங்களாக வலிப்பு நோய் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி அதே பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு பாலுசாமி சுவாமி கும்பிட சென்றவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாலுசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் பாலுசாமி சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பாலுசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து  உடையார்பாளையம் காவல் நிலையத்தில் பாலுசாமி மனைவி மாரியம்மாள் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்வழக்கு பதிந்து விசாரணை

Tags : college student ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...