×

சம்பா பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

அரியலூர்,நவ.28: சம்பா பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்று வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். திருமானூர் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் சுமார் 7000 ெஹக்டர் அளவில் கோ.ஆர் 50, சிஆர் 1009, பிபிடி 5204 ஆகிய நெல் ரகங்கள் நடவுசெய்து 20 முதல் 30 நாட்கள் பயிராக உள்ளது. திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் களப்பணியாளர்கள் வயல் ஆய்வு செய்த பொழுது நெற்பயிரின் தூர்களின் குருத்துப்பகுதி வெங்காய இலை சருகு போன்று காணப்பட்டது. இந்த அறிகுறி நெற்பயிரினை தாக்கும் ஆனைக்கொம்பன் ஈயின் சேதமாகும். இந்தப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேதநிலை அளவினை (10 இலைகளில் ஒரு இலை வெங்காயத்தாள் போல் இருக்கும்) விடஅதிகமாகும் போது மகசூல் இழப்பு ஏற்படும்.

இதனை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளான தையோமெத்தோசைம் 25 சதவீதம், டபுள்யூ ஜி40 கிராம் ஏக்கர் அல்லது பிப்ரோனில் 5 சதவீதம் இசி 400 மி.லி ஏக்கர் என்ற அளவில் காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்து கட்டுபடுத்தி, விவசாயிகள் அதிக மகசூல் பெறுமாறு திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். வேளாண் அதிகாரி விளக்கம்

Tags : pest attack ,Samba ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை