குழந்தைகள் நட்புவார விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம், நவ. 21: விழுப்புரம் சைல்டு லைன் திட்டத்தின் சார்பாக குழந்தைகள் நட்பு வாரம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் சைல்டு லைன் 1098 பற்றிய விழிப்புணர்வு உரையும், கை கழுவும் முறை பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் சைல்டு லைன் மைய நிறுவனமான பவ்டாவில் நடந்தது. முன்னதாக பவ்டா நிறுவனர் டாக்டர் ஜாஸ்லின் தம்பி, தலைமை ஆசிரியர் ரகு, விழுப்புரம் நகர காவல், போக்குவரத்து காவல் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், அதிகாரிகள், காவலர்கள், பவ்டா பணியாளர்கள்  சைல்டு லைன் எனது நண்பன், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவையுள்ள குழந்தைகளுக்கு பணிபுரிவேன் என்று உறுதியேற்று கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர். விழிப்புணர்வு ஊர்வலத்தை தலைமை ஆசிரியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் துவக்கி

வைத்தனர். ஊர்வலம் கிழக்கு பாண்டி சாலை வழியாக விழுப்புரம், பீமநாயக்கன் தோப்பு நகராட்சி பள்ளியில் முடிவடைந்தது. நிகழ்ச்சியில் சாமுவேல் சாக்கரடீஸ், ஜானில், ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோசப் அலக்சிஸ்  ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Related Stories: