டெங்கு நோய் தடுப்பு பணி தீவிரம்

திருவெண்ணெய்நல்லூர், நவ. 21: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசூர் நான்கு வழி சாலை சந்திப்பில், இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார துறையினர், டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை அழிக்கும் பணிைய மேற்கொண்டனர். இதன் முதல்கட்ட பணியாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகன் தலைமையில்  திருவெண்ணெய்நல்லூர், பண்ருட்டி, திருச்சி, சென்னை உள்ளிட்ட நான்கு வழி சாலையோரங்களிலும் வைக்கப்பட்டுள்ள சைக்கிள், பைக், கார் மற்றும் கனரக வாகனங்கள் பஞ்சர் ஒட்டும் கடைகள் மற்றும் வீடுகளில் வைத்துள்ள தேவையற்ற டயர்களை கண்டறிந்து அதை அதிரடியாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன், கொசுப்புழு ஒழிப்பு பரிசோதகர்கள் பழனி, ராமகிருஷ்ணன், கலைவாணி, இலக்கியா, சிவகாமி, குமார், முத்துக்குமார் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர். இம்முகாமில் ஊராட்சி செயலர் மூவேந்தன், பயிற்றுனர்கள் அருள்அரசி, உமா, செவிலியர் கல்லூரி முதல்வர் ராஜீவ்காந்தி, செவிலியர் கல்லூரி பயிற்சி மாணவிகள், டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Related Stories: