கோயில் பூட்டை உடைத்து 6 பவுன் அம்மன் தாலி, பணம் கொள்ளை

விக்கிரவாண்டி, நவ. 21: விக்கிரவாண்டி அருகே டி. புதுப்பாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த முனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயில் வளாகத்தில் காளியம்மன், துர்க்கை அம்மன், அம்மச்சார் அம்மன், சின்ன மாரியம்மன் ஆகிய கோயில்களின் சன்னதிகள் அமைந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி கோபி (30) சென்றுள்ளார். அப்போது கோயிலின் முன்பக்க பூட்டு உடைந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டிருந்தது. மேலும் அனைத்து அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலி மற்றும் 2 பீரோவை  உடைத்து அதிலிருந்த முடி சீட்டு பணம் 7 ஆயிரம் ஆகியவை திருடு போயிருந்தது தெரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரியதச்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை செய்தனர். மேலும் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் ஆசூர் சாலையில் காலனி பக்கமாக சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் பெரியதச்சூர் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார். கோயில் பூட்டை உடைத்து அம்மன் தாலி மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: