கூட்டுறவுத்துறையில் உள்ள பொது ேசவை மையம் மூலம் ரூ.100 கோடி வருவாய் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

திருச்சி, நவ.21: கூட்டுறவுத்துறையில் உள்ள பொது ேசவை மையம் மூலமாக ரூ.100 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல் தெரிவித்துள்ளார். மாநில அளவிலான 65வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருச்சி கலையரங்கம், புதிய திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் ரூ.10.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், 85 சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினார். விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி 2017-18ம் ஆண்டில் ரூ.10.44 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதுவரை 1,01,458 மகளிருக்கு, ரூபாய் 408.51 கோடி மகளிர் தொழில் முனைவோர் கடனும், 72.512 மகளிருக்கு ரூபாய் 401.96 கோடி பணிபுரியும் மகளிருக்கான கடனும், 3,27,763 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 4,465.39 கோடியும் கடனாக வழங்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மற்றும் சமூகநலத் துறையை போல கூட்டுறவுத் துறையிலும், 4,402 பொது சேவை மையங்கள் அமைத்து, பட்டா, சிட்டா நகல், போக்குவரத்து பயணச்சீட்டு மற்றும், அரசின் சான்றிதழ்கள் வழங்கி 31.10.2018 வரை ரூ.100.52 கோடி வருவாயினை கூட்டுறவுச் சங்கங்கள் ஈட்டியுள்ளன.

Advertising
Advertising

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன்சங்கங்களின் பயிர்க்கடன் பெற ஏதுவாக, மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கியுள்ள விவசாயிகளுக்கு, 31.10.2018 வரை 3,38,407 ரூபே கிசான் கார்டு அட்டைகளும் மற்றும் கூட்டுறவு வங்கி வாடிககையாளர்களுக்கு 2,47,642 நபர்களுக்கு ரூபே பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு இயக்கத்திற்கு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்ஸில், 21.10.2018 அன்று நடைபெற்ற பன்னாட்டுக் கூட்டுறவு இயக்கத்தின் பொதுப்பேரவையிலும், 22.10.2018 முதல் 26.10.2018 வரை நடைபெற்ற அமெரிக்க கூட்டுறவுகளின் 5வது உச்சி மாநாட்டிலும், நானும் துறை உயர்அலுவலர்களும் கலந்து கொண்டோம். அங்கு நடைமுறையில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகளில் உள்ள சிறப்பம்சங்களை தமிழகத்திலும் பின்பற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கலெக்டர் ராஜாமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: