திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 188 எஸ்சி, எஸ்டி மாணவிகளுக்கு கனரா வங்கி கல்வி நிதி உதவி

திருச்சி, நவ. 21: திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 188 எஸ்சி, எஸ்டி மாணவிகளுக்கு கனரா வங்கியின் கல்வி நிதி உதவியை கலெக்டர் ராஜாமணி வழங்கினார். கனரா வங்கி செயல்படுத்தி வரும் பல சமூக நலத் திட்டங்களில், கனரா வித்யா ஜோதி திட்டம் குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் 2013-14ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி படிப்பில் சிறந்து விளங்கும் எஸ்சி, எஸ்டி மாணவிகளின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வைகயில் அரசுப் பள்ளிகளில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவிகளில் 5 முதல் 7ம் வகுப்பு வரை ரூ2500ம் மற்றும் 8 முதல் 10 வகுப்பு வரை ரூ.5000ம் ஒரு கிளைக்கு 6 மாணவிகள் வீதம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை கனரா வங்கியின் நிறுவனர் தினமான நேற்று திருச்சி மாவட்டத்தின் 34 கிளைகள் மூலம் 188 மாணவிகளுக்கு மொத்தம் ரூ.7,10,000ஐ திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி வழங்கினார். விழாவில் பேசிய கலெக்டர்  ராஜாமணி, கல்வியின் மேன்மை பற்றி எடுத்துரைத்து, கல்வி உதவித் தொகை வழங்கும் கனரா வங்கியின் தொடர்ந்த சேவையைப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் கனரா வங்கி மண்டல அலுவலக துணைப் பொது மேலாளர் சினேகலதா ஜான்சன், தாசில்தார் சிவசுப்பிரமணியன்,, கனரா வங்கி திருச்சி மண்டல கோட்ட மேலாளர்கள் உமா மகேஸ்வரி, அண்ணாதுரை, மேலாளர்கள் மனோன்மணி, தர்ம பெருமாள், மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீராம் மற்றும் கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நிறுவனர் தினத்தை கொண்டாடும் வகையில் கனரா வங்கி மண்டல அலுவலகத்தில், அரசு மருத்துவமனை   உதவியுடன் ரத்த தான முகாம் நடைபெற்றது. திரளான அலுவலர்கள் மற்றும்  வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

Related Stories: