தும்பலம் கிராமத்தில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்

தா.பேட்டை, நவ.21:  தும்பலம் கிராமத்தில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதால் நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 தா.பேட்டை ஒன்றியம் தும்பலம் கிராமத்தில் தெருநாய்கள் அதிகளவு சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே நாய்களை பிடிக்க சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் கூறும்போது, தும்பலத்தில் தெருநாய்கள் அதிகளவு சுற்றித்திரிகின்றன. இதனால் குழந்தைகள், முதியோர், வாகனத்தில் செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. பல நேரங்களில் நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டு இருசக்கர வாகனத்தின் குறுக்கே வந்து விழுகிறது. இதனால் விபத்து ஏற்படுகிறது. சில வெறிநாய்கள் நடந்து செல்லும் குழந்தைகள், பெரியோர்களை துரத்திச் சென்று கடிக்கிறது. நாயிடம் இருந்து தப்பிப்பித்து ஓடும்பபோது சிலர் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. எனவே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க திருச்சி கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories: