திருச்சி மாநகராட்சியில் 1.73 லட்சம் குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்

திருச்சி, நவ.21: திருச்சி  மாநகராட்சியில் டெங்கு  காய்ச்சல் கட்டுப்படுத்தும்  நடவடிக்கையாக 1லட்சத்து 73ஆயிரம் 360பொதுமக்கள்  மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  நிலவேம்பு கசாயம்   வழங்கப்பட்டது.  
மாநகராட்சி சார்பில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்டவைகள் வராமல் தடுத்திடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறது. அதன் பேரில் மாநகராட்சி சித்த மருந்தகத்திலிருந்து தினந்தோறும் 1000 லிட்டர் முதல் 1200லிட்டர் வரை நிலவேம்பு குடிநீர் தயார் செய்து,  திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட 1,54,360பள்ளி குழந்தைகள், 19,000அங்கன்வாடி  குழந்தைகள் மாதந்தோறும் வழங்கப்பட்டு பயனடைந்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் மற்றும்  வைரஸ் காய்ச்சலை கட்டுப் படுத்துவதற்கு புனித அன்னாள் மேல்  நிலைப்பள்ளியில்  பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் நிலவேம்பு கசாயம்  பள்ளி மாணவிகளுக்கு சித்த மருத்துவர் ரத்னா, நிர்வாக அலுவலர் சண்முகம்  ஆகியோர் வழங்கினர்.

மேலும் நிலவேம்பு குடிநீர்  பீமநகர் சித்த மருந்தகம் மற்றும் எடலைப்பட்டிபுதூர், இ.பி.ரோடு சித்த  மருந்தகங்களிலும் சித்த மருத்துவ அலுவலர்களின் மேற்பார்வையில் தயார் செய்து  மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், புகை வண்டி நிலையம்  மற்றும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளிகள், அம்மா உணவகங்கள்,  மாநகராட்சி அலுவலகங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  அங்கன்வாடி  நிலையங்கள் மற்றும் குடிசைப் பகுதிகள் ஆகிய இடங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறவும் என்று மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: