கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு 4,000 தனிநபர் கழிப்பிடம் கட்டப்படும் திருச்சி மாநகராட்சி தகவல்

திருச்சி, நவ.21: திருச்சி மாநகரில் 4000 தனிநபர் கழிப்பறை கட்டப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி சார்பில் தனியார் அமைப்புகளுடன் இணைந்து உலக கழிப்பறை தினவிழவிழா மற்றும் இல்லம்தோறும் கழிவறைகள் அவசியம்  மற்றும் மாநகர தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  மாநகராட்சி  ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நகர பொறியாளர் அமுதவல்லி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அனைவரும் கழிப்பறையை பயன்படுத்துவோம், கைகளை சுத்தமாக தினமும் சோப்பை கொண்டு கழுவுவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு கழிப்பிடம்  இல்லா வீடுகள் கண்டறியப்பட்டு அரசு மானியத்துடன் 4,000 தனிநபர் கழிப்பிடம் கட்டப்பட உள்ளது என ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். விழாவில் சிறப்பாக கழிப்பறையை பராமரிப்பு செய்தமைக்கு 50 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழை ஆணையர் வழங்கினார். இதில் நகர்நல அலுவலர் ஜெகநாதன், தனியார் அமைப்பு நிர்வாகிகள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: