அரசு தேர்வுகள் மண்டல அதிகாரி தகவல் கலிங்கமுடையான்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம்

துறையூர், நவ. 21: துறையூரை அடுத்த கலிங்கமுடையான்பட்டியில் கறவை மாடுகளுக்கான இலவச மருத்துவ முகாம் மாவட்ட பால்வள கூட்டுறவு சங்க தலைவர் கார்த்திகேயன் தலைமையில்  நடைபெற்றது. கால்நடை மருத்துவர்கள் தமிழ்ச்செல்வன், சுந்தர வடிவேல் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாமில் சுமார் 500 கறவை பசு மாடுகளுக்கு இலவச பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மேலும் பசு மாடுகளுக்கு பசுந்தீவனம், இயற்கை மருத்துவம், வளர்ப்பு முறை, பால் சுரக்க என்ன செய்ய வேண்டும்? என்ன மாதிரியான உணவு வழங்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

Related Stories: