×

முதல்வரின் நிவாரண அறிவிப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது விவசாயிகள் குற்றச்சாட்டு

மன்னார்குடி, நவ. 21: முதல்வரின் நிவாரண அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என பி.ஆர். பாண்டியன் கூறினார். தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் மன் னார்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி, கஜா புயல் காரணமாக காவிரி டெல்டா முடங்கி கிடக்கிறது. கிராமப் புறங்களில் உள்ள மரங்கள் இதுவரை அகற்றப்படவில்லை. உள்ளாட்சி நிர்வாகம் செயல்படவில்லை. ஒரு கிராம நிர்வாக அலுவலர் மூன்று முதல் 5  கிராமங்களுக்கு பொறுப்பு வகிப்பதால் கிராம பகுதிகளுக்கு நிவாரண பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அமுதம் அங்காடியில் அரிசி மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்  இருப்பு இல்லாததால் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 என அறிவித்திருக்கிறார்.

இது மிகுந்த ஏமாற்றம், அதிர்ச்சியளிக்கிறது. முதல்வர் உடனடியாக விவசாயிகள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி கருத்துக்களைக் கேட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க முன் வர வேண்டும். மர்மமான முறையில் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சென்று இருப்பது கண்டனத்திற்குரியது. பிரதமர் நரேந்திர மோடி இன்னும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஏன் பார்வையிடவில்லை.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வர் நான்கு நாட்களாக பார்வையிடாமல் ஹெலிகாப்டரில் பார்வையிட்டு சென்தற்கான காரணத்தை விளக்க வேண்டும். மத்திய அரசு போதுமான நிவாரண தொகையை கொடுத்து நிவாரண பணிகளை தொடங்க வேண்டும்,இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார்.

Tags : Chief Minister ,relief announcement ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...