×

முத்துப்பேட்டை அருகே கஜாபுயலால் கோயில் தலமரம், கலசம் விழுந்ததால் பக்தர்கள் கவலை

முத்துப்பேட்டை நவ.21:  திருவாரூர்  மாவட்டம், முத்துப்பேட்டை அருகே பேட்டை பகுதியில் பழமையான சவுந்தரேசுவர சுவாமி கோயில் உள்ளது.சுக்ரீவன் வழிபட்டு வணங்கிய இத்தலத்தில் வைகாசி விசாகம், கார்த்திகை வழிபாடு, மார் கழி உற்சவம், திருவாதிரை போன்ற வழிபாடுகள் நடந்து வருகின்றன. இக்கோயில் தல மரமான இலவ மரம் கோயில் வாசல் பகுதியில் செழித்து வளர்ந்திருந்தது. சுமார்  70 ஆண்டுகள் பழமையான இலவ மரங்கள் அனைத்துமே சில தினங்களுக்கு முன்பு அடித்த  கஜா புயல் வேகத்தில் முறிந்து விழுந்து விட்டன. மேலும் கோயில் கோபுர கலசங்களும் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் பறந்து விழுந்துவிட்டன. இந்நிலையில் திருப்பணிகள்  உபயதாரர்களால் கோயிலில் தொடங்கப்பட்டு அறநிலையத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மையால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தலமரம், கலசங்கள் விழுந்தது கண்டு பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.

Tags : Devotees ,temple ,Muppattukkal ,
× RELATED தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்