×

வலங்கைமான் அருகே மின்விநியோகம் சீரமைக்க கோரி மக்கள் சாலை மறியல் போராட்டம்

வலங்கைமான், நவ. 21:  வலங்கைமான் அடுத்த மேலவிடையல் ஊராட்சியில் மின்விநியோகம் சீரடையாத காரணத்தால் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில்  கஜாபயுல் தாக்கத்தால்முன்னனூறுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அடியோடு முறிந்து விழுந்தது. இதன் காரணமாக வலங்கைமான் தாலுகாவில் அனைத்து பகுதிகளும் இருளில் முழ்கியது. இதன் காரணமாக அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிகளிலும் மின்தடை ஏற்பட்டதால் இணையசேவை மற்றும் செல்போன் சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து படிப்படியாக மின்விநியோகம்  சீர்செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்   மேலவிடையல் ஊராட்சி பெரியார் காலனியில் இருநூறுக்கும் மேற்பட்ட குடுபங்கள் உள்ளன.

இதில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக மின்விநியோகம் சீரடையாத காரணத்தால் கடும் குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.  அதனையடுத்து நேற்று காலை வலங்கைமான் -குடவாசல் சாலையில் பெரியார் காலனி பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்க்ளுடன்  வலங்கைமான் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்து. இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Valangaiman ,
× RELATED நீர் நிலைகளில் போதிய தண்ணீர் இல்லை...