×

பாலியல் பலாத்கார வழக்கில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை

கோவை, நவ.21:  பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார்.  கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் சுமித்சரண் தலைமை வகித்தார். இதில் போலீஸ் துணை கமிஷனர்கள் பாலாஜிசரவணன்(சட்டம் ஒழுங்கு), பெருமாள்(குற்றப்பிரிவு), செல்வக்குமார்(தலைமையிடம்), ஈஸ்வரன்(ஆயுதப்படை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 பின்னர், மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள், அதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் விபரங்கள், நிலுவையில் உள்ள குற்றவாளிகளின் விபரங்கள் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் சுமித்சரண் பேசியதாவது: நிலுவையில் உள்ள ெகாலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை போலீசார் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் ேபாலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். புகார் கொடுக்க வரும் மக்களை அலைக்கழிக்ககூடாது.   பாலியல், பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். கஞ்சா விற்பனையை தடுக்க ேபாலீசார் முறையாக ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கமிஷனர் சுமித்சரண் பேசினார். இக்கூட்டத்தில் போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : rape ,
× RELATED புதுச்சேரியில் கொடூரம்: பாலியல்...