கஜா புயலால் சேதமான விவசாய நிலங்கள் கணக்கெடுப்பு பணியை 22க்குள் முடிக்க உத்தரவு

திருச்சி, நவ.20: திருச்சி மாவட்டத்தில் கஜா புயல் தாக்குதலால் வாழை உள்ள விவசாய நிலங்களை கணக் கெடுப்பு பணியை வரும் 22ந்தேதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் அந்தநல்லுார் ஒன்றியம், வயலூர் பகுதிகளில் கஜா புயலில் வாழைகள் சேதமடைந்த  பகுதிகளில் அமைச்சர் வளர்மதி நேற்று ஆய்வு மேற்கொண்டு சேதம் குறித்த கணக்கெடுக்கும் பணியினை முடுக்கி விட்டார். அப்போது அமைச்சர் வளர்மதி கூறுகையில்,  திருச்சி மாவட்டத்தில் கஜாபுயல் மழையினால் அந்தநல்லூர், திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர்,மணிகண்டம் ஆகிய ஒன்றியங்களில் வாழை சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது. மருங்காபுரி, மணப்பாறை, வையம்பட்டி ஆகிய பகுதிகளில் தென்னை மரங்களும், எலுமிச்சை செடிகளும் சேதமடைந்துள்ளது. மணப்பாறை நகரப்பகுதியில் சாலை ஒரங்களில் உள்ள மரங்கள்முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அன்றைய தினமே சீரமைப்பு செய்யப்பட்டு சாலை போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி வருகிறது. மணப்பாறை பகுதியில் 24கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கஜா புயலினால் முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

இவற்றினை மின்சாரவாரியத்தினர் உடனடியாக சீரமைப்பு செய்து முழுமையாக மணப்பாறை பகுதியில் குடிநீர்வழங்குவது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. விவசாயிகள் நிலத்தில் யார் உழவு செய்து வருகிறார்களோ அவர்களுக்கு நிவாரண உதவித்தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுத்துள்ளது. சேதமடைந்த எந்த ஒரு விவசாய நிலமும் விடுபடக் கூடாது.முழுமையாக கணக்கெடுக்க வேண்டும் என்று கலெக்டர், கிராம நிர்வாக அலுவலர், தோட்டக்கலைத் துறை அலுவல ர்கள், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கணக்கெடுக்கும் பணியை வரும் 22ம் தேதிக்குள் விரைவாக முடித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளேன். இவ்வாறு  கூறினார். கலெக்டர் ராஜாமணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பால்ராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.

Related Stories: