101வது பிறந்தநாள் விழா இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரசார் மரியாதை

தூத்துக்குடி, நவ. 20: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101வது  பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கும், படத்திற்கும் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை ெசலுத்தினர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரசார் கட்சி கொடியேற்றியும், அவரது சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா. சார்பில், மாவட்ட அலுவலகத்தில் நடந்த விழாவில், இந்திரா காந்தி படத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் அம்பிகாபதி, ரவிக்குமார், பொதுச்செயலாளர் சீனிவாசன், தொழிலாளர் அணி மாவட்டத் தலைவர் சிவனணைந்தபெருமாள், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்அருண்நேருராஜ், தொழிலாளர் அணி மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணி, மாநகர துணைத் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரசார் மாவட்டத் தலைவர்  முரளிதரன் தலைமையில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி, வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டேவிட் பிரபாகரன், பட்டதாரி பிரிவு தலைவர் ஜேக்கப் ரூபன், எஸ்சி/எஸ்டி பிரிவு மாவட்டத் தலைவர் ராஜாராம்,  டி. சி. டி. யு தொழிற்சங்கத் தலைவர் பிறங்கிளின் ஜோஸ், மீனவர் அணி மாநில பொதுச்செயலாளர் ரொனால்டு வில்லவராயர், மாவட்ட பொருளாளர் அந்தோணி முத்து, மகளிர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவி கனியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஏரல் :   சாயர்புரத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி  பிறந்தநாளை காங்கிரசார் கொண்டாடினர். இதையொட்டி சாயர்புரம் நகரத் தலைவர்  மணி தலைமையில் தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் ஜெயக்குமார் கட்சிக் கொடியேற்றினார். இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் மச்சேந்திரன்  இந்திரா காந்தி படத்திற்கு மாலை அணிவித்தார். இதில் சாயர்புரம்  நகர துணைத்தலைவர் ஏசுதாஸ் செல்லத்துரை, தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவச வேஷ்டி,  சேலை வழங்கினார். மாணவர் காங்கிரஸ் முன்னாள் வட்டாரத் தலைவர் மால் ரவி இனிப்பு  வழங்கினார். விழாவில் நிர்வாகிகள் மாசிலாமணி, விக்டர்,  சவுந்தரராஜன், அந்தோணிராஜ், பூலோகபாண்டி, டேவிட், செல்வராஜ்,  சூசைமாணிக்கம், ராஜகோபால், ரகுநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  கோவில்பட்டி: கோவில்பட்டியில்  வடக்கு மாவட்ட காங்கிரசார் இந்திரா காந்தி படத்திற்கு மாலை அணிவித்தனர். வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவில்பட்டி காந்திமண்டபத்தில் நடந்த விழாவிற்கு தலைமை வகித்த வடக்கு மாவட்டத் தலைவர்  சீனிவாசன், இந்திராகாந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கோவில்பட்டி நகரத் தலைவர்  சண்முகராஜ், ஒன்றியத் தலைவர் ரமேஷ்மூர்த்தி இனிப்பு வழங்கினர். மூத்த  தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் திருப்பதிராஜா, பொதுக்குழு  உறுப்பினர்கள் உமாசங்கர், பிரேம்குமார், நிர்வாகிகள் பிச்சைக்கனி,  கொம்பையா, செம்புகுட்டி, நல்லமதி, பங்காருசாமி, சந்திரமோகன், கருப்பசாமி  மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

    வைகுண்டம்: வைகுண்டம் புதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் இந்திராகாந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தகவல்அறியும் உரிமை சட்டப்பிரிவு சார்பில் நடந்த இவ்விழாவிற்கு, வைகுண்டம் தகவல்அறியும் உரிமை சட்டப்பிரிவு வட்டாரத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் நகரத் தலைவர் சேதுபாண்டியன், நிர்வாகி வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியை செல்லம்மாள் வரவேற்றார். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு தகவல்அறியும் உரிமை சட்டப்பிரிவின் தெற்கு மாவட்டத் தலைவர் கணேஷ்குமார், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் செந்தில்குமார் இனிப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் இனிப்பு வழங்கினர். இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயராஜ், மகளிர் அணி மங்களம், பள்ளி ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

  உடன்குடி:  உடன்குடியில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் நடந்தது. இதையொட்டி உடன்குடி பேரூராட்சி திடலில் கோசல்ராம் நினைவு கொடிக்கம்பம் முன் இந்திரா காந்தி படத்துக்கு மூத்த தலைவர் வெற்றிவேல் தலைமையில்  பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் மாலை அணிவித்தார். கலைப்பிரிவு மாவட்ட பொருளாளர் கோபால் இனிப்பு வழங்கினார். மகளிர் காங்கிரஸ் மாவட்டத் தலைவி அன்புராணி, நகர காங்கிரஸ் தலைவர் முத்து, கவிஞர் பூவெழில், வட்டாரச் செயலாளர் செந்தில், கன்னிமுத்து, பிரபாகர், ராகவன் முன்னிலை வகித்தனர். இதில் முருகன், கிணற்றான்கரையான், வடிவேல், சிதம்பரம், வேம்பு, மந்திரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் நகர தலைவர் அமீன் நன்றி கூறினார்.

 இதே போல் உடன்குடி வட்டார, நகர காங்கிரஸ் சார்பில்  இந்திரா காந்தி பிறந்த நாள் விழா மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா நடந்தது. தலைமை வகித்த வட்டாரத் தலைவர் துரைராஜ் ஜோசப், நிலவேம்பு குடிநீர் வழங்கினார். முன்னதாக  வட்டார துணைத்தலைவர் வைகுண்டராஜா இந்திரா படத்திற்கு மாலை அணிவித்தார். மகளிர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அன்புராணி, உடன்குடி நகரத் தலைவர் முத்து, வட்டார பொருளாளர் அருள்ராமச்சந்திர ன், வட்டார பொதுச்செயலாளர் கன்னிமுத்து, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முத்துகுமார்  முன்னிலை வகித்தனர். வட்டார துணைத்தலைவர் ரகுமத்துல்லா, கிராம கமிட்டி தலைவர்கள் குலசை சுப்பிரமணியன், பரமன்குறிச்சி மாயாண்டிதாஸ், மணப்பாடு ஜோசப் மற்றும் ஹென்றி, ஜெயபாண்டியன், கருப்பசாமி, ஞானராஜ், முருகேசன், சுந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  நகர காங்.செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

Related Stories: