நாசரேத்தில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

நாசரேத் நவ.20: நாசரேத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வட்டார ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாசரேத் வட்டார ஓய்வு பெற்ற அலுவலர் சங்க தலைவர் பேராசிரியர் ஜெயச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாசரேத் புனித லூக்கா மருத்துவமனை முன்பு உள்ள ரோட்டின் இருபக்கமும் மேல்நிலைப்பள்ளிகள், புனித லூக்கா சமுதாய கல்லூரி மற்றும் கடைகள் நிறைந்துள்ளன.

இந்த ரோட்டின் வளைவில் எந்த நேரமும் போக்குவரத்து அதிகமாக காணப்படும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இதன் வழியாக தான் சைக்கிள்கள், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். செவ்வாய்கிழமை அன்று பொதுமக்கள் வாரசந்தைக்கு சென்று விட்டு இந்த ரோட்டின் வழியாக வருவார்கள். மேலும் பஸ்கள், லாரிகள் மற்றும் வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. வேகத்தடை இல்லாததால் சிறு சிறு விபத்துகள் நடந்து வருகின்றன.

 எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாசரேத் புனித லூக்கா மருத்துவமனை முன்பு உள்ள ரோட்டின் வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: