கோவில்பட்டியில் சாலையோரம் குப்பை கொட்டுவதால் நோய் பரவும் அபாயம்

கோவில்பட்டி, நவ. 20: கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் அச்சையாவிடம் தேமுதிக நகரச் செயலாளர் பழனி தலைமையில் மாவட்டப் பிரதிநிதி  கருப்பசாமி, தொண்டர் அணி செயலாளர் லட்சுமணன், 32வது வார்டு கிளைச் செயலாளர்  கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கோவில்பட்டி வக்கீல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் அதிக அளவில் குப்பை கொட்டுவதால், அப்பகுதியில் உற்பத்தியாகும்  கொசுக்கள் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மேலும், இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளின் போது அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுவிஷயங்களில் நகராட்சி நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி நோய் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க  முன்வரவேண்டும்.

Related Stories: