முறைகேடாக பழக்கடை ஒதுக்கீடு

மதுரை, நவ. 20: பழக்கடை ஒதுக்கீடு செய்ய கோரி சாலையோர பழ வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்து நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மதுரை வைகை வணிகர் பழ வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று கலெக்டர் நடராஜனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். திடீரென ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோரம் பழ வியாபாரம் செய்து வருகிறோம். மதுரை மாட்டுத்தாவணியில் 285 பழக்கடைக்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இங்கு கடை பெற்றவர்களில் சிலர் தங்களது குடும்ப உறுப்பினர் மற்றும் போலியான பெயரில் ஒரே நபர் பல கடைகளை பெற்றுள்ளனர். முறைகேடாக பழக்கடை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளான 100 பேருக்கு கடை ஒதுக்கீடு செய்ய வில்லை. தங்களுக்கும் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரி கலெக்டர் நடராஜனிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். இதுதொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரை செய்தார்.

Related Stories: