கஜா புயலுக்கு ஒன்றரை ஏக்கர் கரும்பு சேதம் சாணார்பட்டி விவசாயிகள் கவலை

கோபால்பட்டி, நவ. 20: சாணார்பட்டி பகுதியில் கஜா புயலினால் ஒன்றரை ஏக்கர் கரும்புகள் வேரோடு சாய்ந்ததன. விவசாயிகளுக்கு ரூ.பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதால் கவலையடைந்துள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கொசவபட்டி, சிலுவத்தூர், தவசிமடை, நொச்சிஓடைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கருப்பு கரும்புகள் அதிகளவில் விளைவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகைக்கு 3 மாதமே உள்ள நிலையில் கரும்புகளை பட்டம் பிரட்டியும், சோகைகளை நீக்கியும் பராமரித்து வந்தனர். பாதிக்கு மேல் வளர்ந்து வந்த நிலையில் கஜா புயல் காரணமாக கரும்புகள் வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அய்யகுட்டியபட்டியைச் சேர்ந்த விவசாயி ரத்தினசாமி கூறுகையில், ‘‘பொங்கலுக்கான கரும்புகள் ஒரு வருட வெள்ளாமை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கருப்பு கரும்புகள் வெட்டப்பட்டு வெளிமாவட்ட, மாநிலங்களுக்கும் அனுப்பப்படும்.

இந்தாண்டு குறைந்தளவு தண்ணீரை கொண்டு மிகுந்த சிரமப்பட்டு கரும்புகளை வளர்த்தோம். ஆனால் கஜா புயல் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் உள்ள கரும்புகளை சாய்த்து விட்டது. இவற்றை நிமிர்த்தும் பணி நடைபெற்று வருகறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு கொடுத்துள்ளோம். உரிய இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: