பட்டுக்கோட்டையில் பொதுமக்கள் மறியல்

பட்டுக்கோட்டை , நவ. 20:  புயல் பாதிப்புகளை அதிகாரிகள் வந்து பார்க்காததால் பட்டுக்கோட்டை பகுதியில்  பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டையில் 2 இடங்களில் நேற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டை நகராட்சி 33வது வார்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் பட்டுக்கோட்டை- தஞ்சை சாலை மேலத்தெரு பஸ்ஸ்டாப் அருகே மறியலில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டை ஆர்டிஓ மகாலட்சுமி, தாசில்தார் சாந்தகுமார், டிஎஸ்பி கணேசமூர்த்தி மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குடிநீர் கிடைக்க ஏதுவாக ஜெனரேட்டர் வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி ஆர்டிஓ, தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேசிய ஊரக சுகாதார இயக்க மேலாண்மை இயக்குனரும், பட்டுக்கோட்டை சிறப்பு அதிகாரியுமான டாக்டர் தரேஷ் அகமது சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையம் பகுதியிலும் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

Related Stories: