முன்னாள் நகர்மன்ற தலைவர் கோரிக்கை கஜா புயலால் பொங்கல் கரும்பு சேதம் ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்

தஞ்சை, நவ. 20:  கஜா புயலில் முற்றிலும் சேதமடைந்த பொங்கல் கரும்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென தஞ்சையில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அம்மாப்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

அதில் பாபநாசம் வட்டம் அம்மாப்பேட்டை, நடுப்பட்டி, புதூர் பகுதிகளில் 20 ஏக்கர் நிலத்தில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்தோம். தற்போது வீசிய கஜா புயலால் 20 ஏக்கரிலும் கரும்பு முறிந்து முற்றிலும் சேதமடைந்துவிட்டது. ஏக்கருக்கு ரூ.3 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இது எங்களுக்கு பேரிழப்பாகும். எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட பொங்கல் கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கையில் ஒடிந்த கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories: