ஆற்று மணலை இறக்குமதி செய்து விற்க வணிகர்களுக்கு விண்ணப்பம்

புதுச்சேரி, நவ. 20: புதுச்சேரியில் வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்து விற்பதற்கு வணிகர்கள் பதிவு செய்ய விண்ணப்பம் கோரப்படுகின்றன. இது குறித்து புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: கட்டுமான நோக்கத்திற்கான மணல் தட்டுப்பாடாக உள்ளது என்கிற காரணத்தால் புதுச்சேரி அரசானது வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. கட்டுமான நோக்கத்திற்கு தேவைப்படும் மணலை இறக்குமதி செய்து விற்பனை செய்ய கருதுகிற எவரும் ெசல்லத்தக்க இறக்குமதி/ வணிகர் பதிவினை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இறக்குமதி/ கனிமப் பொருள் வணிகராக பதிவு செய்ய விரும்பும் நபரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதிவு செய்வதற்கான இந்த விண்ணப்பமானது, உரியவாறு நிரப்பப்பட்டு ரூ.1000 மற்றும் ரூ.1 லட்சத்துக்கு புதுச்சேரி வருவாய் மற்றும் மேலாண்மை துறை, சிறப்பு செயலர் (வருவாய்) என்னும் பெயரில் வரைவு கேட்போலை மற்றும் பணம் செலுத்த ஆணை எடுத்து அதனை விண்ணப்பத்துடன் இணைத்து தேவையான நகல்களுடன் மேற்சொன்ன புதுச்சேரி வருவாய் மற்றும் மேலாண்மை துறை செயலரிடம் (செயலர்) சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பமானது, சிறப்பு செயலர் (வருவாய்)- உடன்- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: