22ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம்

புதுச்சேரி, நவ. 20: புதுச்சேரி மின்துறை புறநகர் (வடக்கு) செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திபுதுச்சேரி மின்துறையில் மின்நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் திருக்கனூர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு அலுவலகத்தில் வரும் 22ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், காட்டேரிகுப்பம் மார்க்கெட் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடக்கிறது. இதில் அந்தந்த மின்விநியோகம் அலுவலகத்துக்கு உட்பட்ட அனைத்து மின்நுகர்வோர்கள் தங்களது மின்விநியோக சம்பந்தமான அனைத்து குறைகளையும் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: