65ம் ஆண்டு அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

புதுச்சேரி, நவ. 20:     கூட்டுறவு வார விழாவையொட்டி புதுச்சேரி மாநில கூட்டுறவு ஒன்றியம் சார்பில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு விசாரணை மற்றும் ஆய்வு என்ற தலைப்பில் கடந்த 14ம் தேதியும், கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் இயக்குநர்களுக்கு தலைமைத்திறன் குறித்து 15ம் தேதியும், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் மேலாளர்கள் மற்றும் முதுநிலை பணியாளர்களுக்கு எப்படி செய்வது? என்ற தலைப்பில் 16ம் தேதியும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 76க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து 65ம் ஆண்டு அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்கு கூடத்தில் இன்று (20ம் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது.  

அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்குகிறார். லட்சுமி நாராயணன் எம்எல்ஏ., முன்னிலை வகிக்கிறார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஸ்மித்தா வரவேற்று பேசுகிறார். செயலர் சுந்தரவடிவேலு வாழ்த்தி பேசுகிறார். முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடந்தாண்டு சிறப்பாக செயல்பட்ட பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டுகிறார். கூட்டுறவு ஒன்றிய நிர்வாகியும், துணை பதிவாளருமான இரிசப்பன் நன்றி கூறுகிறார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி மணவாளன், முகமது குத்புதின் ஆகியோர் செய்துள்ளனர்.

Related Stories: