ஆனத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

விழுப்புரம், நவ. 20:  உளுந்தூர்பேட்டை அருகே ஆனத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் விழுப்புரம் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனத்தூர் கிராமம் விவசாயத்தை நம்பியே உள்ளது. தற்போது இந்த ஊரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க முயற்சித்து வருகின்றனர். இந்த கடை அமையவுள்ள 10 மீட்டர் ெதாலைவில்தான் கம்பராயர் சுவாமி பெருமாள் கோயில் உள்ளது. 50 மீட்டர் தொலைவில் பெரியாண்டவர்கள் கோயிலும், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.

மேலும் அங்குள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் அனைத்துப் பெண்களும் வழிபாடு செய்துவிட்டு செல்கின்றனர். டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தை சுற்றி விவசாய நிலங்கள் உள்ளது. குறிப்பாக கொய்யா, மாங்காய், வெண்டை, கத்தரி சாகுபடி செய்துள்ளனர். குடிமகன்களால் விவசாய நிலத்திற்கும், அதில் வேலை செய்யும் பெண்களுக்கும் பாதிப்பில்லாத நிலை ஏற்படும். மேலும் விவசாயம் செய்பவர்கள் அதனை நம்பியே உள்ளனர்.

எனவே விவசாயிகளின் நல காத்திடவும், வழிபாட்டு தலங்களின் உரியமையை நாட்டிடவும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கள் பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடை வழியாக தொட்டிமேடு, சிறுகிராமம், நத்தம், குடுமியான்குப்பம், வீரப்பார் போன்ற கிராமங்களுக்கும் செல்ல முடியும். அதுவும் போக்குவரத்து வசதியில்லாததால் மகளிர், குழந்தைகள், மூதாட்டிகள் மற்றும் முதியோர்கள் நடந்தே செல்வார்கள். சிறுகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவ, மாணவிகளும் இவ்வழியாகவே செல்கின்றனர். எனவே விவசாயம், வழிபாட்டுத்தலம், பள்ளிகள் உள்ள இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க ஆட்சியர் அனுமதி வழங்கக்கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: