கப்பலில் வேலை வாங்கி தருவதாக ₹8 லட்சம் மோசடி

விழுப்புரம், நவ. 20:  செஞ்சி அருகே காங்கிரஸ் பிரமுகர் மகனுக்கு வேலை வாங்கிக்கொடுப்பதாகக்கூறி பணம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெரியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(63). காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வட்டார தலைவராக இருந்தார். இதனிடையே இவருக்கு செஞ்சி புதுத்தெருவைச் சேர்ந்த அரங்க காந்தி(53) என்பவர் பழக்கமாகியுள்ளார். அரங்க காந்தி தனக்கு மத்திய அமைச்சர்களை நன்கு தெரியும் என்றும் கப்பல் போக்குவரத்து துறையில் வேலை வாங்கிக்கொடுப்பதாகவும், பணம் செலவாகும் என கூறியுள்ளார்.

இதனை நம்பிய சண்முகம் தனது மகன் பிஇ மெக்கானிக்கல் முடித்துள்ளதாகவும், அவருக்கு கப்பலில் ேவலை வாங்கிக்கொடுக்கும்படி அரங்க காந்தியிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் பணம் செலவாகும் என கூறியதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி அரங்க காந்தி கேட்ட ரூ.8.16 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் பணம் கொடுத்து நான்கு ஆண்டுகளாகியும் வேலை வாங்கிக்கொடுக்கவில்லை. பணத்தை திரும்ப சென்று கேட்டபோது கொடுக்காமல் மோசடி செய்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சண்முகம் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அரங்க காந்தியை(53) நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்

படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: