கஜா புயல் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருள் அனுப்பி வைப்பு

விழுப்புரம், நவ. 20:  கஜா புயலின் காரணமாக நாகை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண உதவிகளை செய்யவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். புயல் கடந்து பல நாட்களாகியும் சோகம் தீராத நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அப்பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து திமுக சார்பில் ரூ.1 கோடியும், எம்எல்ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாகவும் அறிவித்தார்.

அதன்படி நேற்று விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் புயாலினால் பாதித்த பொதுமக்களுக்கு 10 டன் அரிசி, 500 பெட்ஷிட் என ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை முதல் தவணையாக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. பொன்முடி எம்எல்ஏ இதனை லாரி மூலம் அனுப்பி வைத்தார். அப்போது மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, நகர செயலாளர் சக்கரை, துணை செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், அப்துல்சலாம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: