பன்றிக்காய்ச்சல் தடுப்பு பணி

திருக்கோவிலூர், நவ. 20: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், விழுப்புரம் இணைஇயக்குனர் சுந்தரராசு மற்றும் கள்ளக்குறிச்சி சுகாதாரபணிகள் துணைஇயக்குனர் ஜெமினி ஆகியோரின் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் அரசுமருத்துவமனை மற்றும் நகர்புற சுகாதாரநிலையம் இணைந்து திருக்கோவிலூர் அரசுமருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் தடுப்புபணி மேற்கொள்ளப்பட்டது. திருக்கோவிலூர் அரசுமருத்துவமனை முழுவதும் 5சதவிகிதம் லைசால்கொண்டு தொற்றுநீக்கம் செய்யப்பட்டது. நோயாளிகளுக்கு கைகழுவும் முறை செய்து காண்பிக்கப்பட்டது.

 முகாமில் கள்ளக்குறிச்சி சுகாதாரபணிகள்  துணைஇயக்குனரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், திருக்கோவிலூர் அரசுமருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் அலமேலு, ஜி.அரியூர் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், செவிலியர் கண்காணிப்பாளர்கள் ஜெயந்தி, சான்காத்து, ஜி.அரியூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமலிங்கம், சுகாதாரஆய்வாளர் சங்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: