மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து போலீஸ் உதவி ஆய்வாளர் கால் துண்டானது

சென்னை: பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் எஸ்.ஐ கால் துண்டானது. இதுதொடர்பாக, லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (54). இவர் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று இரவுப் பணியில் ஈடுபட்டு இருந்த ஏழுமலை, நசரத்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து ரோந்துப் பணிக்காக, பூந்தமல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல் நிலைய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாப்பாரப்பட்டி என்ற இடத்தில் வந்த போது, ஏழுமலை சாலையைக் கடக்க முயற்சி செய்தார். அப்போது, சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற சரக்கு லாரி ஒன்று, மின்னல் வேகத்தில் ஏழுமலை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஏழுமலையின் வலது கால் மீது சரக்கு லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.

வலி பொறுக்க முடியாமல் ஏழுமலை அலறினார். தகவலறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலானய்வு பிரிவு போலீசார் ஏழுமலையை மீட்டு, சிகிச்சைக்காக பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கால் பலத்த சேதமடைந்தது உள்ளதால், காலை அகற்றினால் மட்டுமே அவரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று கூறினர். அதனை ஏற்றுக் கொண்ட அவரது உறவினர்கள், மேல் சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டதன் பேரில், கால் அகற்றப்பட்டு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் சங்கரன்கோவிலை சேர்ந்த அந்தோணியை (50)  போலீசார் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

* ஆதம்பாக்கம் வள்ளலார் தெருவை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் சந்தானகிருஷ்ணன் (35) என்பவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் பீரோ வைத்திருந்த 10 சவரன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பினர்.

* செங்குன்றத்தில் அடுத்த பாடியநல்லூர் விளையாட்டு மைதானம் மற்றும் அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் கஞ்சா, மாவா விற்ற செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்த வெற்றி (எ) வெற்றிவேல் (34),  பனையூரை சேர்ந்த ஷாகுல் அமீது (38), கும்மிடிப்பூண்டி தபால் தெருவை சேர்ந்த அசோக்குமார் (46), செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்த மகேந்திரன் (எ) மாவா மகேந்திரன் (28) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் ₹30 ஆயிரம் மதிப்புள்ள மாவா பொட்டலங்களை பறிமுதல் செய்யப்பட்டது.

* அம்பத்தூர் அருகே கொரட்டூர், 200 அடி சாலையில் கணவருடன் பைக்கில் சென்ற கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 41வது தெருவை சேர்ந்த மாநகராட்சி ஊழியர் கஜராஜவள்ளி (36) என்பவரிடன் கழுத்தில் கிடந்த 8 சவரன் தங்க செயினை பைக் ஆசாமிகள் பறித்து சென்றனர்.

* ஊரப்பாக்கம் சிவசாமி தெருவை சேர்ந்த நித்யா (24), தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பெருங்ளத்தூர் பஸ் நிலையம் அருகே பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார். கணவன் காயமடைந்தார். குழந்தைகள் உயிர் தப்பினர்.

* சினிமா பாணியில் பைக்கில் இருந்து சாவியை எடுத்துக் கொண்டு ஓடுவது போல் நடித்து, ஆட்கள் இல்லாத இடத்தில் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (23) என்றும் சூளை கண்ணப்பர் திடலை சேர்ந்த தமிழரசன் (எ) பாவாடை (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* ராயப்பேட்டை மல்லன் பொன்னப்ப தெருவில் உள்ள பெட்டிக்கடையில் போதை பொருட்களை விற்ற ராயப்பேட்டை அருணகிரி தெருவை சேர்ந்த பூபதி (56), ராயப்பேட்டையை சேர்ந்த பாபு (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* நில பிரச்னை தொடர்பாக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட போது ஷெனாய் நகர் அருணாச்சலம் தெருவை சேர்ந்த செல்வராஜ் (43) என்பவரை இரும்பு கம்பியால் தாக்கிய  மாடம்பாக்கம் பாரதி நகரை சேர்ந்த நரசிம்மன் (51) என்பவரை போலீசார் தாக்கிய கைது செய்தனர்.

* தி.நகர், தேனாம்பேட்டை பகுதிகளில் இரவு நேரங்களில் கஞ்சா விற்ற தேனாம்ேபட்டையை சேர்ந்த கமலதாஸ் (எ) சுப்ரமணியன் (45), நவீன்குமார் (45), இம்ரான்கான் (19), நல்லதம்பி (55) ஆகிய 4 பேரிஅ போலீசார் கைது செய்தனர்.

கார் மோதியதில் முதியவர் படுகாயம் குடிபோதையால் நடந்த விபரீதம்

தண்டையார்பேட்டை சிவாஜிநகர் 9வது தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (24). இவர் வாடகைக்கு கார் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10.50 மணிக்கு அடையாறில் இருந்து பாரிமுனை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கார் காமராஜர் சாலையில் உள்ள பார்த்தசாரதி கோயில் கிழக்கு தோரண வாசல் அருகே வரும்போது, சர்வீஸ் சாலையில் இருந்து காமராஜர் சாலையை முதியவர் ஒருவர் குடிபோதையில் கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார்.

Related Stories: