போலீஸ் கமிஷனருடன் மலேசிய மாணவர்கள் சந்திப்பு

சென்னை, நவ.20:மலேசிய நாட்டில் தடய அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் நடராஜன் மூர்த்தி (52) தலைமையில் 15 மாணவ, மாணவிகள் நேற்று வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர், ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் உயர் பயிற்சியகத்திற்கு சென்று காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி விவரங்கள், துப்பாக்கி சுடும் தளம் போன்றவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து, மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு தடய அறிவியல் துறை அலுவலகத்திற்கு சென்று குற்றங்களை கண்டிபிடிப்பதில் தடய அறிவியலின் பங்கு எந்தளவிற்கு முக்கியமானதாக உள்ளது என்பதை பற்றி தடய அறிவியல் நிபுணர்களிடம் கேட்டறிந்தனர்.

பிறகு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது சென்னையில் தடய அறிவியல் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட வழக்குகள் குறித்து கேட்டறிந்தனர். ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனையில் போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் சென்னையில் பல வழக்குகளை முன்னுதாரணமாக கூறி தடய அறிவியல் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின்போது, சென்னை பெருநகர போக்குவரத்து இணை கமிஷனர் சுதாகர் உடனிருந்தார்.

Related Stories: