தொழில்நுட்ப சவால் போட்டி குடிநீர் வாரியத்திற்கு மத்திய அரசு பரிசு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்காமல் சுத்தம் செய்வதற்கான ‘தொழில்நுட்ப சவால்’ என்ற போட்டியினை மத்திய அரசின் வீட்டு வளர்ச்சி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் அம்ரூத் திட்டத்தின் கீழ் அறிவித்திருந்தது. இந்த போட்டியில் சென்னைக் குடிநீர் வாரியம் கழிவுநீர் குழாய்களை பந்து கடத்தும் முறையில் இயந்திரங்களின் மூலமாக சுத்தம் செய்வது குறித்த கருத்துருவுடன் பங்கேற்றது. சென்னைக் குடிநீர் வாரியத்தின் செயல்முறை  விளக்கத்தினை ஆவணப் படமாக தயாரித்து டெல்லிக்கு எடுத்துச் சென்று மற்ற போட்டியாளர்களின் ஆவணங்களுடன் பரிசீலனை செய்து, போட்டியில் பங்கேற்றவர்களில் சென்னைக் குடிநீர் வாரியத்தினை ஆறு வெற்றியாளர்களில் ஒருவராக தேர்வு செய்து  அறிவிப்பினை வெளியிட்டது.

உலக கழிப்பறை  தினத்தினை முன்னிட்டு நேற்று டெல்லி விக்யான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சென்னைக் குடிநீர் வாரியத்திற்கான பரிசை வழங்கினார்.  இதை சென்னைக் குடிநீர் வாரியத்தின் பொறியியல் இயக்குநர் ஆர்.சிவசண்முகம் பெற்று கொண்டார். இந்த பரிசை பெறுவதற்காக முயற்சிகளை எடுத்துக் கொண்ட  பொறியாளர்கள்  குழுவினரை சென்னைக் குடிநீர் வாரியத்தின்  மேலாண்மை இயக்குநர் அஷோக் டோங்கரே, வெகுவாக பாராட்டினார்.

Related Stories: