ஆகாஷ் மருத்துவமனையில் உலக ஆண்கள் தின விழா

கீழ்ப்பாக்கம்: சென்னை வடபழனி நூறடி சாலையில் ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனை உள்ளது. குழந்தையின்மை சிகிச்சையில் உலகப் புகழ்பெற்ற இந்த மருத்துவமனை எதிரில் டாக்டர் காமராஜ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று உலக ஆண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காமராஜ் மருத்துவமனையில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கை காமராஜ் மருத்துவமனை இயக்குநரும் பிரபல பாலியல் சிகிச்சை நிபுணருமான காமராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

ஆகாஷ் மருத்துவமனையின் இயக்குநர் ஜெயராணி காமராஜ், பிரபல எலும்பு நோய் சிகிச்சை நிபுணர் பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் 20 திருமண தம்பதிகள் உட்பட 200 பேர் பங்கேற்றனர். இதுகுறித்து காமராஜ் கூறுகையில், ‘‘ஒருவருக்கு ஆண்மை தான் கம்பீரத்தையும் ஆளுமையையும் பீறுநடையையும் கொடுக்கிறது. ஒருவர் ஆண்மையுடன் இருந்தாலே அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அர்த்தமாகும். திருமணத்துக்கு முன்பு பல பொருத்தங்களை பார்ப்பதைப்போல திருமணத்துக்கு முன்பு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்’’  என்றார்.

Related Stories: