‘வாருங்கள் இறைவனை காணலாம்’ பாளையில் ஏழை ஜோடிக்கு இலவச திருமணம்

நெல்லை, நவ.19: அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மற்றும் பலரது கூட்டு முயற்சியால் வாருங்கள் இறைவனை காணலாம் என்ற பெயரில் கடந்த 31 ஆண்டுகளுக்கு முன் ஆழிகுடியில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது.

32வது ஆண்டாக பாளையில் நடந்தநிகழ்ச்சிக்கு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மணி தலைைம வகித்தார். பொது மேலாளர் துரைராஜ் மற்றும் பாளை அரசு சித்த மருத்துவமனை உதவி விரிவுரையாளர் ஜஸ்டஸ்அன்டனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாளை டிஎஸ்எஸ்எஸ் இயக்குநர் மோட்சராஜன் இறை வேண்டல் நிகழ்த்தினார். நெல்லை ஷிபா மருத்துவமனை முகம்மதுஷாபி குத்துவிளக்கேற்றினார். வக்கீல் பிரபாகர் வரவேற்றார். அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற மேலாண் இயக்குநர் பால்ராஜ் துவக்கி வைத்து பேசினார்.

பாளை செல்வி மகால் உரிமையாளர் தனராஜ் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை தலைமைச் செயலக தனி அலுவலர் தர்மராஜ், ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளர் சிதம்பரபாண்டியன், தூத்துக்குடி வட்டாட்சியர் இசக்கிராஜ், என்கேவி விஸ்வநாதன், புத்தனேரி செல்லப்பா, கல்யாணசுந்தரம், முருகப்பன், ஜெரால்டு செல்வராஜ், விஸ்வநாதன், செல்லப்பா, ரத்தினசேகர், ஜெகதீசன், அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் காளிச்சாமி, டேனியல் சாலமோன், சமுத்திரம், மாணிக்கம், ஜெபராஜ் நவமணி, சுப்பிரமணியன், அழகிரிசாமி, சசிகுமார், அருணாச்சலம், சுடலைமணி, சங்கரநாராயணன், வெங்கடேஷ்பிரபு, மகேந்திரன், சிதம்பரம், அகமதுஷாலி, பாம்பே கண்ணன், உச்சிமாகாளி, செல்வராஜ், தர்மராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அபுபக்கர் நன்றி கூறினார்.

Related Stories: