அண்ணா பிறந்தநாள் விழா நெல்லையில் திமுக சார்பில் கட்டுரை, பேச்சு போட்டி திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்பு

நெல்லை, நவ.19:  அண்ணாவின் 110வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் மதிதா பள்ளியில் நேற்று நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

திமுக இைளஞரணி சார்பில் நடந்த போட்டிக்கு நெல்லை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் (மத்திய) வில்சன் மணித்துரை, (மேற்கு) ஆறுமுகச்சாமி, (கிழக்கு) செல்லத்துரை ஆகியோர் தலைமை வகித்தனர். போட்டிகளை நெல்லை கிழக்கு மாவட்ட ெசயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், ஏஎல்எஸ் லட்சுமணன் எம்எல்ஏ துவக்கி வைத்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆதிபரமேஸ்வரன், முகமதுஅலி ஜின்னா, வேல்முருகன், முத்துராமன், வைகுண்டராமன், ஹக்கிம், முத்துவேல், ராஜதுைர, சரவணன், மகாராஜன், ஜபருல்லாகான் முன்னிலை வகித்தனர்.

மாநில இளைஞரணி துணை செயலாளர் அசன்முகம்மது ஜின்னா, தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரை பாரதி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இதில் மாநகர பிரதிநிதி காசிமணி, வர்த்தக அணி அமைப்பாளர் மைதீன்மல்கான், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநகர துணை அமைப்பாளர் மேகை செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர். மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பால்மாயாண்டி நன்றி கூறினார். கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் கவிஞர் மூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Related Stories: