வேலூர் மாவட்டத்தில் இருந்து கார்த்திகை தீபதிருவிழாவுக்காக திருவண்ணாமலைக்கு 300 சிறப்பு பஸ்கள் அதிகாரிகள் தகவல்

வேலூர், நவ.19: கார்த்திகை தீபதிருவிழாவையொட்டி வேலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை 300 சிறப்பு பஸகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வரும் 23ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவர்.

இதையொட்டி தமிழக அரசு போக்குவரத்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்னையில் இருந்து 1200 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் வரும் 22, 23ம் தேதிகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. அதேபோல், வேலூர் மாவட்டத்தில் 300 சிறப்பு பஸ்கள் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை இயக்கப்படும். குறிப்பாக வேலூரில் இருந்து 110 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 100 பஸ்களும் ஆற்காட்டில் இருந்து 90 பஸ்களும் இயக்கப்படுகிறது. பயணிகளின் வருகைக்கு ஏற்ப மேற்கண்ட 3 இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: