×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கூடுதலாக 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை, நவ.19: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கூடுதலாக 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கார்திகை தீபத்திருவிழாவையொட்டி நகரமே விழாக்கோலம் போல பூண்டுள்ளது. திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதேபோல், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பை கருதி, கோயில் நிர்வாகம் சார்பில் கோபுர நுழைவு வாயிகள், சன்னதி நுழைவு வாயில்கள், வடக்கு மற்றும் தெற்கு ஒத்தவாடை தெருக்கள், பே கோபுரத்தெரு, ராஜகோபுரம் முன்பு உள்ள பகுதிகள் உள்பட 103 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கூடுதலாக கோயில் வளாகத்தில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் இதுவரை 127 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சுவாமி வீதியுலா வரும் மாடவீதிகளில் தற்காலிகமாக 11 இடங்களில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. திருவிழாவின் போது, பஞ்சமூர்த்திகள் அலங்காரம் நடைபெறும் திருக்கல்யாண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள 14 கண்காணிப்பு கேமராக்களும், 360 டிகிரி சுழல் கேமரா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags : Thiruvannamalai Annamalaiyar ,
× RELATED பக்தர்களுக்கு தொல்லை கொடுத்த 30...