காணாமல் போன மாணவன் ‘வாட்ஸ் அப்’ உதவியால் 4 மணி நேரத்தில் மீட்பு பெற்றோரிடம் ஒப்படைப்பு வேலூர் சத்துவாச்சாரியில்

வேலூர், நவ.16: வேலூர் சத்துவாச்சாரியில் காணாமல் போன 9ம் வகுப்பு மாணவன் 4 மணிநேரத்தில் வாட்ஸ்அப் உதவியால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் தஸ்தகீர். இவரது மகன் உமர்(16), மேல்விஷாரத்தில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை பல இடங்களில் தேடியுள்ளனர். சிறுவனை எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து பெற்றோர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தனர்.

இதையடுத்து எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில், 3 தனிப்படைகள் அமைத்து சிறுவனை தேடி வந்தனர். இதற்கிடையில் சிறுவன் காணாமல் போனது குறித்து இன்ஸ்பெக்டர் புகழேந்தி, ‘வாட்ஸ் அப்’ குழுக்களில் அந்த தகவலை பகிர்ந்தார். இந்த தகவல் பகிரப்பட்டு 4 மணி நேரத்தில் காட்பாடியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ரூபிநாத், சுப்பிரமணி ஆகியோர் சிறுவனை ஏற்கனவே மீட்டு காட்பாடி ரயில்வே போலீசில் ஒப்படைத்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்டது. அதன்பேரில் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார் சிறுவனை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: