உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் நீரிழிவு நோய்க்கான சிறப்பு முகாம்

திருச்சி, நவ.16: உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு திருச்சி அண்ணாசிலை அருகில் உள்ள ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்கள் நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்திற்கு ஆண்டுக்கு 10 சதவீதம் பேர் சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம் பாரம்பரியமாக சர்க்கரை நோய் உள்ள குடும்பத்தினர் உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, மாறுபட்ட உணவு முறைகள், மனஅழுத்தம், ரத்தகொதிப்பு உள்ளவர்கள், வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவை. சோர்வு, உடல் எடை குறைதல், அதிக பசி, அதிக தாகம், சிறுநீர் அதிகம் போகுதல் இவை நீரிழிவு நோய் அறிகுறிகள். மேலும் கண் பார்வை இழப்பு, மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம் செயலிழப்பு, பாத புண்கள் ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறிகள்.

இவ்வாறு அறிகுறி உள்ளவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமிற்கு சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் லலிதாரகுநாதன், கண்மருத்துவர் சுஜாதா, இருதய மருத்துவர் கணேசன், சிறுநீரக மருத்துவர் மற்றும் சிறுநீரக மருத்துவர் டாக்டர் பாலமுருகன், டாக்டர் கந்தசாமி, சிறுநீரக அறுவை பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைந்த நீரிழிவு மருத்துவக்குழுவால் இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் உணவு நிபுணர் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. தேவைப்படுபவர்களுக்கு ரத்தப்பரிசோதனை, இசிஜி, எக்கோ, முழுஉடல் பரிசோதனை அனைத்தும் 50 சதவிகிதம் சலுகை அளிக்கப்படுகிறது. மேலும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரத்த சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம், தனியார் காப்பீட்டு திட்டமான ஸ்டார் ஹெல்த் மெடிஅசிஸ்ட் மற்றும் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான அனைத்து காப்பீட்டு திட்டங்களும் இம்மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவ முகாமில் கலந்துகொள்ள 0431-2716666, 84899 12738 என்ற எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கூறினார்.முகாம் ஏற்பாடுகளை பிஆர்ஓ கதிரவன், உதயபாஸ்கர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: